உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 97 text

1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்: பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது. 2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது: நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். 3அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது. 4அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது: பூமி அதைக் கண்டு அதிர்ந்தது. 5கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று. 6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது: சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 7சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிறயாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக: தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 8சீயோன் கேட்டு மகிழ்ந்தது: கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள். 9கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்: எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர். 10கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்: அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். 11நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 12நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).