உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 108 text

1தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது: நான் பாடிக்கீர்த்தனம் பண்ணுவேன்: என் மகிமையும் பாடும். 2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன். 3கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன்: ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. 5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்: உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 6உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். 7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார்: ஆகையால் களிகூருவேன்: சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்து கொள்ளுவேன். 8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது: எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். 9மோவாப் என் பாதபாத்திரம்: ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்: பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். 10அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? 11எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா? 12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்: மனுஷனுடைய உதவி விருதா. 13தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்: அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).