உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 76 text

1யூதாவில் தேவன் அறியப்பட்டவர்: இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. 2சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது. 3அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.) 4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர். 5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்: வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று. 6யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. 7நீர், நீரே, பயங்கரமானவர்: உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 8நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது, 9வானத்திலிருந்து, நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்: பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.) 10மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்: மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். 11பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்: அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள். 12பிரபுக்களின் ஆவியை அடக்குவார்: பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).