உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 112 text

1அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 2அவன் சந்ததிபூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 3ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்: அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். 4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்: அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன். 5இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். 6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்: நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். 7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்: அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். 8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்: அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். 9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்: அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். 10துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக்கரைந்துபோவான்: துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).