உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 61 text

1தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். 2என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்: எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். 3நீர் எனக்கு அடைக்கலமும்: சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர். 4நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்: உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.) 5தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்: உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். 6ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்: அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்: தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். 8இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).