உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 93 text

1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்து கொண்டிருக்கிறார்: கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்: ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 2உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது: நீர் அநாதியாயிருக்கிறீர். 3கர்த்தாவே, நதிகள் எழும்பின: நதிகள் இரைச்சலிட்டு எழும்பின: நதிகள் அலைதிரண்டு எழும்பின. 4திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்: கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).