உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 59 text

1என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்: என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். 2அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும். 3இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்: கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள். 4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்: எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும். 5சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்: வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.) 6அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 7இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்: அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள். 8ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்: புறஜாதிகள் யாவரையும் இகழுவீர். 9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்: தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். 10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்: தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். 11அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே: எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும். 12அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது: அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக. 13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்: இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.) 14அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறு முறுத்துக்கொண்டிருப்பார்கள். 16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்: எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். 17என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்: தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).