உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 57 text

1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்: உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது: விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். 2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். 3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். 4என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது: தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்: அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. 5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்: உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 6என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்: என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று: எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.) 7என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது: நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன். 8என் மகிமையே, விழி: வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள் அதிகாலையில் விழித்துக்கொள்வேன். 9ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்: ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 10உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது. 11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்: உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).