உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 29 text

1பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்: கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 2கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். 3கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது: மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்: கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 4கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது: கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. 5கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது: கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். 6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப் போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார். 7கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும். 8கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்: கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார். 9கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்: அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள். 10கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்: கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார். 11கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்: கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).