உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 23 text

1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்: நான் தாழ்ச்சியடையேன். 2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்: தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்: உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்: என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்: நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).