உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 21 text

1கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்: உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! 2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.) 3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர். 4அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்: நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். 5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது: மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர். 6அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்: அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். 7ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார். 8உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்: உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். 9உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப் போடுவீர்: கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்: அக்கினி அவர்களைப் பட்சிக்கும். 10அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர். 11அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்: தீவினையை எத்தனம்பண்ணினார்கள்: ஒன்றும் வாய்க்காமற்போயிற்று. 12அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர். 13கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்: அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).