உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 150 text

1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்: அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள். 2அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்: மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 3எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்: வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்: யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். 5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்: பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். 6சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).