உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 147 text

1கர்த்தரைத் துதியுங்கள்: நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. 2கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்: துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். 3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 4அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். 5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்: அவருடைய அறிவு அளவில்லாதது. 6கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்: துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். 7கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள்: நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள். 8அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். 9அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். 10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்: வீரனுடைய கால்களில் பிரியப்படார். 11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். 12எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி: சீயோனே, உன் தேவனைத் துதி. 13அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 14அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்: அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது. 16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்: சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்: அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? 18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்: தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். 19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். 20அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை: அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).