உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 146 text

1அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. 2நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்: நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன். 3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். 4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்: அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். 5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 6அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளயாவையும் உண்டாக்கினவர்: அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்: பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்: கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். 8குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்: மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்: நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். 9பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்: அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்: துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். 10கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்: சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).