உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 142 text

1கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்: கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 2அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்: அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். 3என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்: நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 4வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை: எனக்கு அடைக்கலமில்லாமற்போயிற்று: என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 5கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன். 6என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்: என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள். 7உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்: எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).