Psalms 138 text
1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்: தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
2உமது பரிசுத்த ஆலுயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்: உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்: என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்:
4கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
5கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.
6கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்: மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்: என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்: உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
8கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்: கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது: உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).