உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 126 text

1சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம். 2அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது: அப்பொழுது கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 3கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்: இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம். 4கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும். 5கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். 6அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்: ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).