உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 113 text

1அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்: கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். 2இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடையநாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. 3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. 4கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்: அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 5உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? 6அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். 7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்: எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 8அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். 9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார் அல்லேலூயா.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).