உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 101 text

1இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்: கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 2உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்: எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். 3தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்: வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்: அது என்னைப் பற்றாது. 4மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்: பொல்லாதவனை அறியமாட்டேன். 5பிறனை இரகசியமாய் அவதூறு பண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்: மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என்கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்: உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான். 7கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை: பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை. 8அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர்அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).