Job 1 text
1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
2அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.
3அவனுக்கு எழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைகாரர்களும் இருந்தார்கள். அதனால் அந்த மனுஷன் கிழக்கத்தி புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
4அவன் குமாரர், அவனவன் தன் தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள்.
5விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு, ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படி யோபும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான். இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான்.
6ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
7கர்த்தர் சாத்தானைப் பார்த்து நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
8கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபுவின்மேல் கவனம் வைத்தாயோ? ஊத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
9அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?
10நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர். அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
11ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
12கர்த்தர் சாத்தானை நோக்கி இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது. அவன் மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டுப்போனான்.
13பின்பு ஒரு நாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,
14ஓரு ஆள் அவனிடத்தில் வந்து எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில்,
15சபேயர் அவர்கள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள். வேளையாட்களையும் பட்டயகருக்கினால் வெட்டிப்போட்டாரகள். நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
16இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளைபும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது. நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
17இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் வேறொருவன் வந்து கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள். வேளையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப் போட்டார்கள். நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
18இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும். தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,
19வனாந்தர வழியாயப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின் மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள். நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
20அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து
21நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.
22இவை எல்லாவற்றிலும் பாவஞ்செய்யவுமில்லை தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).