Job 15 text
1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்திரமாக
2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றை கொண்டல் காற்றினால் நிரப்பி,
3பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ ?
4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
5உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக் காட்டுகிறது. நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துக் கொண்டீர்.
6நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது. உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
7மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானே ? பர்வதங்களுக்கு முன்னே உருவாக்கப்பட்டிரோ ?
8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டிரோ?
9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர் ? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது விளங்கியிருக்கிறதோ ?
10உம்முடைய தகப்பனைப் பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருந்தாப்பியோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
11தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ ?
12உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டு போகிறது ? உம்முடைய கண்கள் நெருத்திப் பார்க்கிறது என்ன ?
13தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களை புறப்படபண்ணுகிறீர்.
14மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்க்கும், ஸ்திரிகளிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்க்கும், அவன் எம்மாத்திரம் ?
15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும், அவர் நம்புகிறதில்லை. வானங்களும் அவர் பார்வைக்கு சுத்தமானவைகள் அல்ல.
16அநியாயத்தை தண்ணீரைப் போல குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாய் இருக்கிறான் ?
17உமக்கு காரியத்தை தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும். நான் கண்டதை உமக்கு விபரித்துச் சொல்லுவேன்.
18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக்கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே சொல்லுவேன்.
19அவர்களுக்கு மாத்திரம் பூமி அளிக்கப்பட்டது. அந்நியர் அவர்கள் நடுவே கடந்துப்போக இடமில்லை.
20துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுக்கிறான். பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.
21பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது. அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்குகிறவன் அவன் மேல் வருவான்.
22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான்.
23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்துதிரிகிறான். அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
24இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப் போல அவனை மேற்கொள்ளும்.
25அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
26கடினக்கழுத்தோடும், பருத்தகுமிழுள்ள தன் கேடகங்களோடும் அவருக்கு எதிரராக ஓடுகிறான்.
27அவன் முகத்தை கொழுப்பு மூடியிருக்கிறது. அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது.
28ஆனாலும் பாழான பட்டணங்களிலும் குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
29அவன் ஐசுவரியவானாவதுமில்லை அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை. அப்படிபட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
30இருளுக்கு அவன் தப்புவதில்லை. அக்கினிச்சுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துப் போகப் பண்ணும். அவனுடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான.
31வழிதப்பினவன் மாயையை நம்பானாக. நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
32அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய் பலிக்கும். அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச் செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துப் போகிற ஒலிவமரத்தைப்போலவும் அவன் இருப்பான்.
34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய் போம். பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான். அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).