உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

1 Samuel 16 text

1கர்த்தர் சாமுவேலை நோக்கி இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். 2அதற்குச் சாமுவேல் நான் எப்படிப் போவேன். சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான். அப்பொழுது கர்த்தர் நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிட வந்தேன் என்று சொல்லி, 3ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக. அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன். நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார். 4கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான். அப்பொழுது அவ்வூரின் மேய்ப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். 5அதற்கு அவன் சமாதானந்தான். கர்த்தருக்குப் பலியிட வந்தேன். நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான். மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான். 6அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே, கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான். 7கர்த்தர் சாமுவேலை நோக்கி நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 8அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப் பண்ணினான். அவன் இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். 9ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணிணான். அவன் இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான். 10இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான். பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்து கொள்ளவில்லை என்று சொல்லி, 11உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன் இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான். அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி ஆள் அனுப்பி அவனை அழைப்பி. அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்க மாட்டேன் என்றான். 12ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான். அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான். அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். 13அப்பொழுது சாமுவேல் தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான். அந்நாள் முதற்கொண்டு, கர்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார். சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். 14கர்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. 15அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி இதோ, தேவனால் விடப்படப்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே. 16சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும். அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள். 17சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத்தேடி, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். 18அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன். அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன், கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். 19அப்பொழுது சவுல் ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான். 20அப்பொழுது ஈசாய் அப்பத்தையும், ஒரு துரத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதையின்மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான். 21அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான். அவன் இவனை மிகவும் சிநேகித்தான். அவனுக்கு இவன் ஆயததாரியானான். 22சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும். என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான். 23அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாதஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).