உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

1 Samuel 28 text

1அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். 2தாவீது ஆகீசைப் பார்த்து உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்து கொள்வீர் என்றான். அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி இதற்காக என்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான். 3சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான். இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங் கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான். 4பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். 5சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான். அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக் கொண்டிருந்தது. 6சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது,கர்த்தர் அவனுக்குச்சொப்பனங்களினாலாவது ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை. 7அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான். அதற்கு அவனுடைய ஊழியக்காரர் இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். 8அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள். அவளை அவன் நோக்கி நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்கிறவனை எழும்பிவரச் செய் என்றான். 9அதற்கு அந்த ஸ்திரீ சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரோ. என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன என்றாள். 10அப்பொழுது சவுல் இந்தக் காரியத்துக்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தரின் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர் மேல் ஆணையிட்டான். 11அப்பொழுது அந்த ஸ்திரீ உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன் சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். 12அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர் தான் சவுலாச்சுதே என்றாள். 13ராஜா அவளைப் பார்த்து நீ பயப்படாதே. நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். 14அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள் சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள். அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான். 15சாமுவேல் சவுலை நோக்கி நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல் நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன். பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள். தேவனும் என்னைக் கைவிட்டார். அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறுஉத்தரவு அருளுகிறதில்லை. ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான். 16அதற்குச் சாமுவேல் கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன் ? 17கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். 18நீ கர்த்தருடைய சொல் கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் எனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார். 19கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக் கொடுப்பார். நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள். இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 20அந்தஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான். அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான். 21அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். 22இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன். அதைப் புசிப்பீராக. அப்பொழுது நீர் வழி நடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள். 23அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்.ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின்மேல் உட்கார்ந்தான். 24அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச்சுட்டு, 25சவுலுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப் போனார்கள்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).