உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Proverbs 13 text

1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்: பரிகாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். 2மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்: துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும். 3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்: தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான். 4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது: ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும் 5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்: துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான். 6நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்: துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். 7ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு: மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு. 8மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்: தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான். 9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்: துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம். 10அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்: ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்: கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான். 12நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். 13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்: கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். 14ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 15நற்புத்தி தயையை உண்டாக்கும்: துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. 16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்: மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். 17துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்: உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம். 18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான். 19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது: தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. 20ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்: மூடருக்குத் தோழனோ நாசமடைவான். 21பாவிகளைத் தீவினை தொடரும்: நீதிமான்களுக்கோ நன்மை பயனாக வரும். 22நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 23ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்: நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. 24பிரம்பைக் கையாடாதவன் தன மகனைப் பகைக்கிறான்: அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். 25நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்: துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).