உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Proverbs 11 text

1கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது: சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். 2அகந்தை வந்தால் இலச்சையும் வரும்: தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. 3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்: துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 4கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது: நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். 5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்: துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான். 6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்: துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள். 7துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்: அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம். 8நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்: அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்: நீதிமானோ அறிவினால் தப்புகிறான். 10நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்: துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். 11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்: துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும். 12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்: புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். 13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்: ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். 14ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்: அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். 15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்: பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான். 16நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்: பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள். 17தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்: கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான். 18துன்மார்க்கன் விருதாவேலையைச்செய்கிறான்: நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். 19நீதி ஜீவனுக்கு ஏதவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். 20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்: உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள். 21கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்: நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். 22மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்குச் சமானம். 23நீதிமான்களுடைய ஆசை நன்மையே: துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். 24வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு: அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. 25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்: எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். 26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்: விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். 27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்: தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 28தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்: நீதிமான்களோ துளிரைப் போலே தழைப்பார்கள். 29தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்: மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். 30நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்: ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். 31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே: துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).