உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Proverbs 10 text

1சாலொமோனின் நீதிமொழிகள் ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்: மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான். 2அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது: நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். 3கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்: துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்: சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்: அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். 6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்: கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்: துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும். 8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்: அலப்புகிற மூடனோ விழுவான். 9உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்: கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 10கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்: அலப்புகிற மூடன் விழுவான். 11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று: கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 12பகை விரோதங்களை எழுப்பும்: அன்போ சகல பாவங்களையும் மூடும். 13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்: மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 14ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்: மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 15ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்: ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும். 16நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். 17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்: கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்: புறங்கூறுகிறவன் மதிகேடன். 19சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது: தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி: துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 21நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்: மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள். 22கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்: அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். 23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு: புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்: நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்: நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன் 26பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்: துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். 28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்: துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். 29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம். 30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை: துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை. 31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்: மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம். 32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும், துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).