உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

1 Samuel 5 text

1பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபினேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள். 2பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து தாகோனண்டையிலே வைத்தார்கள். 3அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தது. அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள். 4அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற் படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது. தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது. 5ஆதலால் இந்நாள் வரைக்கும் தாகோனின் பூசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை. 6அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்குக் கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது. அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும் அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். 7இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும் நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி, 8பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையில் கூடிவரச் செய்து இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியைக் காத்பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள். அப்படியே எடுத்துச் சுற்றிக் கொண்டு போனார்கள். 9அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று. அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள் சிறியவர் துவங்கி பெரியவர்மட்டும் மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். 10அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது எக்ரோன் ஊரார் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள். 11அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள். அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது. தேவனுடைய கை அங்கே பாரமாயிருந்தது. 12செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).