உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Zechariah 5 text

1நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன். 2தூதன் நீ காண்கிறது என்னவென்று கேட்டார். பறக்கிற ஒரு புஸ்தகச் சுரளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன். 3அப்பொழுது அவர் இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம். எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறபடியே அழிக்கப்பட்டுப் போவான். ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறபடியே அழிக்கப்பட்டுப்போவான். 4அது திருடன் வீட்டிலும்,என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 5பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார். 6அது என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் அது புறப்பட்டு வருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார். 7இதோ, ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது. மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரி உட்கார்ந்திருந்தாள். 8அப்பொழுது அவர் இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார். 9அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரிகளைக் கண்டேன். அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக் கொத்த செட்டை இருந்தது. அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது. இவர்கள் மரக்காலைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள். 10நான் என்னோடே பேசின தூதனை நோக்கி இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன். 11அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள். அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).