உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Zechariah 3 text

1அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார். அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான். சாத்தான் அவனுக்கு விரோதஞ் செய்ய அவன் வலது பக்கத்திலே நின்றான். 2அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக. சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக. இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளியல்லவா என்றார். 3யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். 4அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி இவன்மேலிருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார். பின்பு அவனை நோக்கி பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார். 5அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார். அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார். 6கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக 7சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய். என் பிரகாரங்களையும் காவல்காப்பாய். இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன். 8இப்போதும் பிரதான ஆசாரியனான யோசுவாவே, நீ கேள். உனக்கு முன்பாக உட்கார்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள். இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர். இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன். 9இதோ, நான் யோசுவாசுக்கு முன்பாக வைத்த கல். இந்த ஒரே கல்லின் மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது. இதோ, நான் அதின் சித்திர வேலையை நிறைவேற்றி, இந்தத் தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 10அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்தி மரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).