The greatest commandment and the mark of a disciple.
God is love. We love because He first loved us, and we are called to love God with all our heart and our neighbour as ourselves.
வேதவசனங்கள் சொல்வது
அன்பில்லாதவன் தேவனை அறியான்: தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4:8 · TAOV
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்: நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். யோவான் 13:34-35 · TAOV
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது: அன்புக்குப் பொறாமையில்லை: அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். 1 கொரிந்தியர் 13:4-7 · TAOV
இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக: இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 22:37-39 · TAOV