உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Nahum 1 text

1நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம். 2கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன். கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர். கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர்,அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர். 3கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த வல்லமையுமுள்ளவர். அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார். கர்த்தருடைய வழி சுழல் காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது. மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. 4அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும். 5அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்து போகும். அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம். 6அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்தில் தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப் போல இறைக்கப்படுகிறது. அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும். 7கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். 8ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார். இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும். 9நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார். இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. 10அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கை யிலும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள். 11கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான். 12கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டு போவார்கள்.அவன் ஒழிந்து போவான். உன்னை நான் சிறுமைப்படுத்தினேன். இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன். 13இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுக்களை அறுப்பேன். 14உன்னைக் குறித்துக் கர்த்தர் கட்டளை கொடுத்திருக்கிறார். இனி உன்பேருக்கு வித்து விதைக்கப்படுவதில்லை. உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன். நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன். 15இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது. யூதாவே, என் பண்டிகைகளை ஆசரி. உன் பொருத்தனைகளைச் செலுத்து. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை. அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).