உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Micah 1 text

1யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரோசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை. 2சகல ஜனங்களே, கேளுங்கள். பூமியே, அதிலுள்ளவைகளே, செவி கொடுங்கள். கர்த்தராகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார். 3இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் இறங்கிப் பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். 4மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும் தண்ணீரைப்போலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்து போகும். 5இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும். யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ? 6ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச் செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கியே புரண்டு விழப்பண்ணி, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன். 7அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும். அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும். அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன். வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும். 8இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன். பறிகொடுத்தவனாகவும் அம்மணனாகவும் நடப்பேன். நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன். 9அதின் காயம் ஆறாதது. அது யூதா மட்டும் வந்தது. என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம் மட்டும் வந்தெட்டினது. 10அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம். பெத்அப்ராவிலே புழுதியில் புரளு. 11சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ. சாயனானில் குடியிருக்கிறவள் வெளியே வருவதில்லை. பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது. 12மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள். ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது. 13லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு. நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி. உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது. 14ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்து விடுவாய். அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப் போகும். 15மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன். அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம் மட்டும் வருவான். 16உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக் கொள். கழுகைப்போல முழு மொட்டையாயிரு, அவர்கள் உன்னை விட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).