உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Jonah 1 text

1அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் 2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். 3அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். 4கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார். அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. 5அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல் செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள். யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக் கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். 6அப்பொழுது மாலுமி அவனிடத்தில்வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை வேண்டிக்கொள். நாம் அழிந்து போகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். 7அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப் போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள். யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. 8அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். 9அதற்கு அவன் நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். 10அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி நீ ஏன் இதைச் செய்தாய்? என்றார்கள். 11பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்த படியால், அவர்கள் அவனை நோக்கி சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். 12அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்து சமுத்திரத்தில் போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும். என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். 13அந்த மனிஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள். ஆனாலும் சமுத்திரம் வெகுமும்மரமாய்க் கொந்தளித்துக் கொண்டேயிருந்தபடியினால் அவர்களால் கூடாமற் போயிற்று. 14அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப் போடாதேயும். குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும். தேவரீர் கர்த்தர். உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, 15யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள். சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது. 16அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப்பண்ணினார்கள். 17யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்று நாள் இருந்தான்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).