உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Isaiah 15 text

1மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று, இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று. 2அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள், நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது, அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும், தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும். 3அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறர்கள். 4எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள், அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது, ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள், அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது. 5என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது, அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள், லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள், ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள். 6நிர்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம், புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற்போகிறது. 7ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள். 8கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும், எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும். 9தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும், தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன், மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).