Hosea 6 text
1கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்,நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார், நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
2இரண்டு நாட்களுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார், மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார், அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
3அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம், அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது, அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்.
4எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது.
5ஆகையால் தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவர்களை வெட்டினேன், என் வாய்மொழிகளைக் கொண்டு அவர்களை அதம் பண்ணினேன், உன் மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.
6பலிகளை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
7அவர்களோ ஆதாமைப் போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய் துரோகம்பண்ணினார்கள்.
8கீலேயாத் அக்கிரமம் செய்பவர்களின் பட்டினம், அது இரத்தக் காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது.
9பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்கு போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது, தோஷமான காரியங்களையே செய்கிறார்கள்.
10பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன், அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு, இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப் போயிற்று.
11யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக் காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).