உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Hosea 12 text

1எப்பிராயீம் காற்றை மேய்ந்து,கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான், அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான், எகிப்துக்கு எண்ணெய் கொண்டு போகப்படுகிறது. 2யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது, அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார், அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். 3அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். 4அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான், பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். 5கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன், யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம். 6இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு, தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக் கொண்டிரு 7அவன் வியாபாரி, கள்ளத் தராசு அவன் கையில் இருக்கிறது, அநியாயஞ் செய்ய விரும்புகிறான். 8எப்பிராயீம் நான் ஐஸ்வரியவானானேன், நான்பொருளைச் சம்பாதித்தேன், நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லை யென்று சொல்லுகிறான். 9உன்னை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்தது முதற்கொண்டு உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், திரும்பவும் உன்னைக் கூடாரங்களில் தாபரிக்கப்பண்ணுவேன். 10அப்படியே தீர்க்கதரிசிகளோடே சொன்னேன், நான் அநேகம் தரிசனங்களை அருளினேன், தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன். 11கீலேயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள், கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள், அவர்களுடைய பீடங்கள் வயல் வரப்புகளில் இருக்கிற கற்குவியலைப்போல் இருக்கிறது. 12யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒருபெண்ணுக்காக ஆடு மேய்த்தான். 13கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார், தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான். 14எப்பிராயீமோ, அவரை மிகவும் கோபப்படுத்தினான், ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த நிந்தையை அவன்மேல் திருப்புவார்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).