உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Ezekiel 15 text

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் 2மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்குமேன்மை என்ன? 3யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ? 4இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும், அதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும், அதின் நடுத்துண்டும் வெந்துபோம், அது எந்த வேலைக்காவது உதவுமோ? 5இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி? 6ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் காட்டுச்செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து, 7என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன், அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களைப் பட்சிக்கும், அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திரும்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 8அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).