உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

1 Chronicles 3 text

1தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர் யெஸ்ரேயேல் ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன், கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன். 2கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன், ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன். 3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன், அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன். 4இந்த ஆறுபேர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள், அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான், எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான். 5எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள் அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும், 6இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், 7நோகா, நேபேக், யப்பியா, 8எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே. 9மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர். 10சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம், இவனுடைய குமாரன் அபியா, இவனுடைய குமாரன் ஆசா, இவனுடைய குமாரன் யோசபாத். 11இவனுடைய குமாரன் யோராம், இவனுடைய குமாரன் அகசியா, அவனுடைய குமாரன் யோவாஸ். 12இவனுடைய குமாரன் அமத்சியா, இவனுடைய குமாரன் அசரியா, இவனுடைய குமாரன் யோதாம். 13இவனுடைய குமாரன் ஆகாஸ், இவனுடைய குமாரன் எசேக்கியா, இவனுடைய குமாரன் மனாசே. 14இவனுடைய குமாரன் ஆமோன், இவனுடைய குமாரன், யோசியா. 15யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே. 16யோக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள், இவனுக்கு மகனானவன் சிதேக்கியா. 17கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல், 18மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள். 19பெதாயாவின் குமாரர், செபாபேல், சிமேயி என்பவர்கள், செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள், இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள். 20அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே. 21அனனியாவின் குமாரர், பெலத்தியா, எசாயா என்பவர்கள், இவனுடைய குமாரன் ரெபாயா, இவனுடைய குமாரன் அர்னான், இவனுடைய குமாரன் ஒபதியா, இவனுடைய குமாரன் செக்கனியா. 22செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள், செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர். 23நெரியாவின் குமாரர், எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர். 24எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).